இந்திய விடுதலையின் 75 ஆம் நினைவு இசைப்பெரும் நிகழ்வு!!

-MMH

இந்தியா விடுதலை பெற்று 75 ஆம் ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய மக்களுக்கு அதன் வளமான கலைப்பண்பாட்டுப் பெருமைகளையும், வரலாற்றையும், சாதனைகளையும் நினைவூட்டும் நிகழ்வாக ஆசாதிஹா அம்ரித் மஹோத்சவ் (AKAM) என்னும் பெரும் இசைநிகழ்வை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம், ஸ்பிக் மக்காய் (SPIC MACAY) என்ற அமைப்போடு இணைந்து தேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபெறும் இசைப்பெரு நிகழ்வைப்  கோவை குமரகுரு கல்வி நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் ஒரு தனித்துவமான மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி, இரண்டு நாள் நிகழ்வாக நநடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்ச்சி இன்று ராமானந்த அடிகளார் அரங்கில் நடைபெற்றது. முதல் நிகழ்வான இன்று, சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற கோபிகா வர்மாவின் மோகினியாட்டத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வாக சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற பண்டிட் உதய் பவால்கரின் துருபத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

-சீனி, போத்தனூர்.

Comments