செவிக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் விதமாக கோவை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது!!

 -MMH

செவிக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் விதமாக கோவை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது!!

  கோவை: மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது.இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.

இத்தகைய இசையை செவிக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் விதமாக கோவை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் பிரபலமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை கிக்கானிக் பள்ளியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் இசை விருந்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் சுபஸ்ரீ தணிக்காச்சலம் மிகவும் பிரபல இசைச் சேனல் பேஸ்புக் மற்றும் யுடியூப் - ன் மூலம் மிகவும் பிரபலம்.இது கோவிட் காலத்தில் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமைந்தது.ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் " வாய்ஸ் ஆப் மியூசிக் "விருதை  சிறப்பு விருந்தினரான பாடகர் ஸ்ரீனிவாஸ்க்கு 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரோட்டரி கிளப் தலைவர் சாந்தி சுரேஷ்,செயலாளர் வசந்தி ரங்காநாத் மற்றும் புராஜக்ட் சேர்மன் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.

மேலும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் மூலம் அன்னையர் தினத்தில் புராஜக்ட் லட்சியம் எண்ட் சர்விக்கல் கேன்சர் தொடங்கப்பட்டது. இது பல தரப்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என இசை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments