அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் பரிசளிப்பு விழா!!

கோவையில் அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் நடந்த மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டிகள் 2022-23-ல் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவைப்புதூர் சுண்டாக்காமுத்தூர் வித்தியாஸ்ரமம் அருகில் அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி இயங்கி வருகிறது. இந்த அகாடமி கடந்த 2015ம் ஆண்டில் துவங்கப்பட்டு டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டு பிரிவுகளில் பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்டோர் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். 4 வயது முதல் 20 வயது உடையவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் விறுவிறுப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள்.

அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி நிர்வாக இயக்குனராக சச்சிதானந்தம், தலைவராக ஹேமலதா ஆகியோர் முன்னின்று மையத்தில் கோவை மாவட்ட அளவில் மூன்றாவது தர வரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகளை 2 நாட்கள் நடத்தினர். இப்போட்டிகளில் கோவை பகுதியை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். 

முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவில் கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் ஹரி நாராயாணன், அகாடமி தலைவர் ஹேமலதா, மூத்த பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போட்டிகள் 11, 13,15,17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளிலும், 19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவிலும் ஆண், பெண்களுக்கு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. 

முடிவில் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற சம்ரித்தி நாயர், ஜொஸ்லின், ரெயான்ஸ், ரெஜிஸ், நரேஷ், அபிஷேக், விஷ்ணு, ஆருத்ரா, சுதிஷ்னா, இலக்கியன், கவியாழ், அகில், சர்வேஸ் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் சேகர், செயலாளர் ஹரிநாராயணன், மூத்த பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் கேடயம், பதக்கம், ரொக்கப்பரிசுகளை வழங்கி, பாராட்டினர். 

ஒவ்வொரு பிரிவிலும் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல், டிராபி பரிசுகளும், இறுதிச்சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. 

போட்டிகளை ஒருங்கிணைப்பாளர்களும், மூத்த பயிற்சியாளர்களுமான கண்ணன், ஜெயக்குமார், ராஜசேகர் நடத்தினர். மேலும் கோயம்புத்தூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம், கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்திய 2வது தர வரிசை போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதல் பரிசு வென்ற மாணவர் ரெஷிஸ்-க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி தலைவர் ஹேமலதா அனைவருக்கும் நன்றி கூறினார். 

அப்போது, நீங்கள் கோவையை சேர்ந்தவராக இருந்தால், உங்கள் குழந்தைகளை தலைசிறந்த வீரர், வீராங்கனைகளாக அர்விந் டேபிள் டென்னிஸ் பயிற்சி மையம் மாற்றும். இந்த அகாடமி மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை, தொடர்ந்து,  7 மணி முதல் 9 மணி வரை மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை சுண்டக்காமுத்தூரில் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டிகள் 2022-23 வென்றவர்களுக்கு பரிசு வழங்கி குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையம் போன் எண்: 99523 38098, 94864 46308 மூத்த பயிற்சியாளர் ரமேஸ் : 94425 44485 தொடர்பு கொள்ளலாம். மேலும் போனில் விசாரணை நேரம் காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை பயிற்சி வகுப்பு விவரம் கேட்டறியலாம்" என அர்விந் டேபிள் டென்னிஸ் அகாடமி தலைவர் ஹேமலதா தெரிவித்தார்.

- ஆர்.கே.விக்கிரம பூபதி.

Comments