தமிழ்நாட்டில் முதன் முறையாக சி என் ஜி டெஸ்டிங் பிளான்!! கோயமுத்தூரில்!!!

கோவை :

தமிழ்நாட்டில் 3,000 கிலோமீட்டர் தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் உக்ரைன் - ரஷ்யா போர் முடிந்தவுடன் கேஸின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை இண்டியன் ஆயில் நிறுவன இயக்குநர் நானேவரே பேட்டி.

கோவை வெள்ளானைப்பட்டியில் ஏர்வியோ தொழில்நுட்பத்தின் சார்பில், இயற்கை எரிவாயு  சிலிண்டர் அழுத்த நிலை பரிசோதனை யுனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் பதிப்பு பிரிவு இயக்குனர் எஸ்.நானேவரே பிளான் பற்றி கூறினா. கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வியோ எரிவாயு சிலிண்டர் பரிசோதனை நிலையம், ஏர்வியோ டெக்னாலஜிஸ் பங்குதாரர்கள் கே. பார்த்தசாரதி, எஸ், பிரதிப், பி.சரவணக்குமார், ஆர்.ஜெயபிரகாஷ் ஆகியோரின் முயற்சியில் தமிழ்நாட்டில் முதலாவது மற்றும் மிகப்பெரியதும் ஆகும். 

கார், பஸ், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். இயற்கை எரிவாயு மிக அழுத்தமான முறையில் சிலிண்டர்களில் 250 பார் அளவு வரை அழுத்தம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அரசின் அனுமதியுடன் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டினை வரும் 2070ம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வரும் 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5 சதம் முதல் 15 சதம் வரையில் இயற்கை எரிவாயு பயன்பாட்டினை ஏற்படுத்தப்படம். 98 சதம் மக்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் எரிவாயு பைப்லைன்கள் பதிக்கப்படும். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பைப்லைன்களை பதிப்பதில் சிக்கல்கள் உள்ளன. இவை மலைப்பிரதேசங்களாகவும் உள்ளன.

பெட்ரோலியம் திரவ எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி சார்ந்தது. ஆனால், இயற்கை எரிவாயு இந்தியாவிலேயே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை எரிவாயுவை பைப்லைன்கள் வழியாக கொண்டு செல்வது எளிது. 

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கடந்த 2019ம் ஆண்டு முதல் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 3000 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படும். 300 இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். பெட்ரோலியம் எரிவாயுவை காட்டிலும், இயற்கை எரிவாயு பாதுகாப்பானது; காற்றை விட லேசானது. 

எல்பிஜி வாயுவை விட 30 சதவீதம் விலை குறைவானது. கோவையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி வேகமாக நடக்கிறது. தொழிற்சாலைகள், விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இப்பணி 2027ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். 

சர்வதேச அளவில் உள்ள பொருளாதார நிலை சீரடையும்போதும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்த பின்னும் சுழ்நிலைகள் மாற்றத்துக்கு ஏற்ப எரிவாயு விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விலையில் மாற்றம் ஏற்படுமென தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments