துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற பத்து பேர், தங்கம்,வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்!!

  -MMH

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற பத்து பேர்,  தங்கம்,வெள்ளி  பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்!! 

  கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில்  துபாயில் அண்மையில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா  சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் உட்பட பத்து பேர் கலந்து கொண்டனர். இந்தியா, துபாய்,அமெரிக்கா, கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளை சேர்ந்த யோகா வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில்,கோவை பிராணா யோகா மையத்தை சேர்ந்த பத்து பேரும் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். ஏழு தங்கம்,மூன்று வெள்ளி என பத்து பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவை பிராணா யோகா மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இது குறித்து, கோவை பிராணா யோகா மைய நிறுவனர்கள் ஜெயலட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் கூறுகையில்; "கல்வியில் சிறந்து விளங்கவும், ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கவும்  யோகா கற்பது அவசியம் எனவும்,மேலும் இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த ஆர்வம் அதிகரிப்பதாக தெரிவித்தனர். இவர்கள் இருவரும்  துபாய் சர்வ தேச போட்டியில் நடுவர்களாகவும் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர், 

இந்த போட்டியில் கோவையை சேர்ந்த பிராணா யோகா மையம் உட்பட ஓசோன்,நலம்,நானக்கனி உள்ளிட்ட மையங்களை சேர்த்த யோகா வீரர்,வீராங்கனைகளும் பதக்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments