ஐ.பி.எல்!! சென்னை- டெல்லி அணிகள் இன்று மோதல்!!

-MMH

டி 20 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்  இந்தியாவின் முக்கிய  நகரங்களில் நடத்தப்பட்டு  வருகிறது. மொத்தம் உள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும் . இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியல் அடிப்படையில் பிளே ஆப் சுற்று நடத்தப்படும்.

முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.  இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள்  குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை அணியை பொறுத்தவரை  இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும்.  

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments