அம்பிஸ் குழுமத்தின் சார்பாக கோவையில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் தொடர் போட்டி...

 

அம்பிஸ் குழுமத்தின் சார்பாக கோவையில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் தொடர் போட்டியில் 32 அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அம்பிஸ் குழுமம் பல்வேறு செயல்திட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு கிளையாக செயல்பட்டு வரும் சாயல் ஈவெண்ட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் அம்பிஸ் குழுமத்தின்   சார்பாக கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்குவிக்கும் விதமாக முதல் சீசனாக அம்பிஸ் கிரிக்கெட் தொடர் போட்டி கோவை வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.சாயல் ஈவெண்ட்ஸ் ஒருங்கிணைத்து, இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டிகளை அம்பிஸ் குழுமங்களின் தலைவர் சார்லஸ் மற்றும் சாயல் ஈவெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் திவ்யா சார்லஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் வீர்ர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதில்,32 அணிகளை சேர்ந்த வீர்ர்கள் கலந்து கொண்டு விளையாடினர்..இரண்டு நாட்களாக நடைபெற்ற இதன் இறுதி போட்டியில் பெரியநாயக்கன்பாளையம் மெக்னோ,மற்றும் கோவில்பாளையம் பி.சி.சி ஆகிய அணிகள் மீதான.இதில் மெக்னோ அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்..

தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார்,கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன்,துடியலூர் வருவாய் ஆய்வாளர் சரத்பாபு,மாருதி பிசியோ கல்லூரி இணை பேராசிரியர் செந்தில்குமார்,ஆகியோர் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தனர்..

-சீனி, போத்தனூர்.

Comments