கோவையில் நாளை துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்!!

-MMH

கடந்த 55 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியும் மற்றும் 19 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளும் கோவையில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு போட்டிகள் நாளை முதல் ஜுன் 1 - வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.                                              

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான திரு. ஜி. செல்வராஜ், துணைத் தலைவர் பழனிசாமி, செயலாளர் திரு. ளு. பாலாஜி, பொருளாளர் திரு. ஆ. னுநநடியடய ஆகியோர்  கூறுகையில், ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுளன.  

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15, ஆயிரம் - மும் வழங்கப்படும். 

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம்-மும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும். 

இந்த போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும். இப்போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். 

இப் போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  துவக்கி வைக்கவுள்ளார்.  ஜுன் 1 – ம் தேதி மாலை 8.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.

-சீனி, போத்தனூர்.

Comments