கோவில்பட்டியில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டிக்கும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தினார்; அதிமுக சார்பில் மே 29-ம் தேதி நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு  மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சரும்     கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள்  திமுக அரசுக்கு எதிராகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE

தமிழகத்தில் இரண்டாண்டு ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இருந்த ஆட்சியாக மாற்றிவிட்டார் சமிபத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையால் இருபத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குற்றச் செயல்களை தடுக்க தவறிய திமுக அரசு இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்ததோடு விற்றவர் குடும்பத்திற்கும் நிவாரனம் கொடுத்து கள்ளச்சாராய செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். 

மேலும் இதற்கு பொறுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டார். தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்று தந்து கல்லூரிக்கு நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ஆண்டு மூன்று முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான அங்கீகாரத்தை இழந்தது இன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை , வரும் காலத்தில் எடப்பாடியாரின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்தால் தான் தமிழகத்தில் பொற்காலம் என்றும் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.மோகன், விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் , மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, பேச்சியம்மாள், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி, நகர துணை செயலாளர் மாதவராஜ், நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments