மயக்க மருந்து கொடுத்து நகை-பணம் கொள்ளை!!
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது வீட்டில் இருந்து ரூ.3 கோடி நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது.
கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. அவர், தனது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் உள்ளார்.
ராஜேஸ்வரி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவருடன் அறிமுகமாகி பின்னர் இருவரும் தொழில் செய்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி அவருடன் பழகிய இடைத்தரகர்கள் ஒன்றாக உணவு அருந்தியுள்ளனர். பின்னர் ராஜேஸ்வரியை தூங்க வைத்து விட்டு வீட்டில் இருந்த இரண்டரை கோடி பணம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் பீரோவை திறந்து பார்த்த ராஜேஷ்வரி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, இராமநாதபுரம் காவல் நிலையித்தில் புகார் செய்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவ்வழக்கில் குற்றவாளியான அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் திருவள்ளூர் மாவட்டத்தில் கைது செய்து உள்ளனர்.
மேலும்இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகியோரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments