இந்தியாவில் முதல் முறையாக கோவையில் அழகான புன்னகை பெற ஷாத் ஏஸ்தடிக்ஸ் பல் சிகிச்சை கிளினிக் துவக்கம்!!

  -MMH

இந்தியாவில் முதல் முறையாக கோவையில் அழகான புன்னகை பெற ஷாத் ஏஸ்தடிக்ஸ் பல் சிகிச்சை கிளினிக் துவக்கம்!!

  ஷாத் ஏஸ்தடிக்ஸ் கோவை மக்களின் புன்னகையை மேம்படுத்தி அழகுபடுத்த புதிய சிறப்பமிக்க பல் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முதன் முறையாக பற்கள் அழகூட்டு முறையில் ஆன்டி ஏஜிங் தன்மையை உருவாக்க கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷாத் ஏஸ்தடிக்ஸ் பல் சிகிச்சை மையம் 2023 ஏப்ரல் 30-ம் தேதி முதல் கோவையில் துவக்கப்படுகிறது. கோவையின் இதயப்பகுதியாக திகழும் ரேஸ்கோர்ஸ்சில், 4000 சதுரடியில் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையில் உங்கள் புன்னகையை மறுசீரமைப்பு செய்யவும், நியூயார்க்கில் மேற்கொள்ளப்படும் தரத்துக்கு இணையாகவும் பற்கள் பதிப்பும் பற்களின் அழகும் இங்கு மேம்படுத்தபடும்.

முதல் முறையாக ஷாத் ஏஸ்தடிக்ஸ் பற்களுக்கான சேவையை, அழகு மற்றும் செயல்பாடுகளைக் கொண்டதாக மாற்றி அமைக்கிறது. புன்னகை மறுசீரமைப்பு, பற்கள் பதித்தல், பற்களை வெண்மைப்படுத்துதல், பீங்கான் போல பளிச்சிட செய்தல், ஈறுகளை மறுமலர்ச்சி பெறச் செய்தல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்கிறது. ஈடு இணையற்ற நம்பிக்கை அளிக்க கூடிய சொகுசான இந்த சேவையை கோவை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாமல் பிற மாவட்ட மக்களும் இங்கு பெறலாம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உங்களுக்கு தெரியுமா? .. 75 சதவீதம் மக்கள் ஏதாவது ஒரு வகையில் பற்களின் வரிசையில் சீரற்ற தன்மையை கொண்டுள்ளனர். சிலருக்கு ஒரு பல் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும், மேலும் ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பற்கள் ஒழுங்கற்ற முறையில் அமைந்திருக்கும். சீரற்ற முறையில் அமைந்த அந்த கோரப்பற்கள் பற்றி கவலை கொள்கிறீர்களா ?.. அது இனி தேவையில்லை. உங்களது புன்னகை, உங்களது மதிப்பை பிரதிபலிக்கும் வகையில், உலகை நீங்கள் புதுமையாக பார்க்கும் விதமாக இனி மாற்றும் 'ஷாத் ஏஸ்தடிக்ஸ்'.

சமீபத்திய ஆய்வின்படி, புன்னகையின் வலிமை, உங்களது உணர்வுகளிலும், உடல் நலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனெனில், ஒரு படத்திற்கு நேர்த்தியான அழகை தருவது புன்னகையாக இருக்கும். அதுவே மின்னுவதாக இருந்தால், உங்களது அழகை மேம்படுத்துவதோடு, நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. புதிய சிந்தனையை ஏற்படுத்துவதோடு, உற்சாகப் படுத்துவதாகவும், பிரகாசிக்கவும் செய்யும். இத்தகைய புன்னகையுடன் எந்த அறையில் நீங்கள் நுழைந்தாலும், உங்களை சுற்றிலும் உள்ளவர்களுக்கு, நம்பிக்கையையும், அழகையும் கவரச் செய்யும். 

பிரபல பல் நிபுணர் மற்றும் நிறுவனருமான மருத்துவர் அர்ஷத், 2500க்கும் மேற்பட்ட பல் வடிவமைப்புகளை உருவாக்கி, சிறப்பான புன்னகையை ஏற்படுத்தி பெயர் பெற்றவர். பற்களால் அழகு இல்லையே என பல ஆண்டுகள் கண்ணீருடன் காத்திருந்தவர்களுக்கு அவற்றையெல்லாம் நீக்கி, இளமையான, மின்னும் புன்னகையை உருவாக்கும் தொழில்நுட்பத்துடன் புது யுக்திகளை கொண்டுள்ளார் இவர். 

இந்த மருத்துவர் நியூயார்க்கில் உள்ள உலக அளவில் அங்கீகாரம், புகழ் பெற்ற பல் நிபுணர்களிடம் பல் அழகுபடுத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்றவர். மருத்துவர் அர்ஷத் மற்றும் அவரது குழுவினர் முகத்தின் அமைப்புக்கும் அதன் நிறத்துக்கும் ஏற்றவகையில் சரியான விகிதத்தில் பற்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள்.  ஒருவர், முக, பற்கள் அமைப்பை மறுசீரமைப்பு செய்து 7 முதல் 15 நாட்களில் அழகான புன்னகையை பெற முடியும். 

கோலிவுட், பாலிவுட், மோலிவுட் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பிரபலங்களுக்கு தரப்படும் தர அளவினை இந்த கிளினிக் கொண்டிருக்கும். கோவையில் இந்த கிளினிக் அமைப்பதால் கோவையின் பெயரை உலக அளவிற்கு உயர்த்த முடியும். கோவை ரேஸ்கோர்ஸ்சில் ஷாத் ஏஸ்தடிக்ஸ் கிளையை துவக்கியதால் சர்வதேச தரத்திலான சேவையை இந்த பகுதியில் உள்ள மக்கள் நியாயமான கட்டணத்தில் பெற முடியும்.

அனைத்து வகையான அதிநவீன கருவிகள், வசதிகளைக் கொண்டிருப்பதோடு நிபுணத்துவமிக்க  அணியையும் கொண்டள்ள ஷாத் ஏஸ்தடிக்ஸ் அழகான புன்னகையின் மதிப்பையும் அறிந்தவர்கள். பல் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் உலகில் நம்பிக்கையுன் பிரகாசிக்கும் திருப்தியுடன் செல்வர். 

ஷாத் ஏஸ்தடிக்ஸ் ஏற்படுத்தப்படும் மாற்றம் அதிசயமானது. மங்கலான, நிறம் மாறிய பற்களும் ஒளிரும். கோரப்பற்களும் நிமிரும்; வலுப்பெறும். காணமல் போன பற்களும் மீண்டும் பதிப்பால் இடம் பெறும். ஈறுகளும் புத்துணர்வு பெறும்.

எது எப்படியானாலும் இது ஒரு முறையை பற்றியது அல்ல அனைத்தும் அனுபவத்தினால் வந்தது. இந்த ஷாத் ஏஸ்தடிக்ஸ் கிளினிக் வரும் ஒவ்வொருவரும் வித்தியாசமான உணர்வை பெற வேண்டும் என நினைப்பவர் மருத்துவர் அர்ஷத். உள்ளே நுழையும்போதே அருமையான சூழல், கனிவான வரவேற்பு, கவனிப்பு, மரியாதையுடன் நடத்தப்படும் பாங்கு அனைவரையும் கவர்வதாக இருக்கும். 

ஷாத் ஏஸ்தடிக்ஸ்:

ஒரு பல் கிளினிக்கிற்கும் மேலானது.வாடிக்கையாளர்களின் கனவை நிறைவேற்றும் இடமாக இருக்கும். இதன் நிறுவனர் இங்கே வருவோர் புதிய நம்பிக்கை உணர்வுடன், மறுமலர்ச்சி புன்னகையுடன் தனித்துவமிக்க பல் அனுபவத்துடன் செல்வர். யார் ஒருவர் தனக்கு தனிப்பட்ட முறையிலான பல் சேவை தேவை என நினைப்பவர்களுக்கு, ஷாத் ஏஸ்தடிக்ஸ் ஒரு சிறந்த சரியான, விரும்பும்  இடமாக இருக்கும் என்றார்.

-சீனி, போத்தனூர்.

Comments