சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விழா!!

 -MMH

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விழா!!

  திருச்சி ரோடு புதிய ஹோண்டா பிக்விங் - சூரிய பாலா மோட்டார்ஸ் ஷோரூமில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விழா!!

திருச்சி ரோடு புதிய ஹோண்டா பிக்விங் - சூரிய பாலா மோட்டார்ஸ் ஷோரூமில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தென்தமிழ்நாடு மண்டல மேலாளர் திரு. அன்பரசன் சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களின் சாவிகளை வழங்கினார். அப்போது உடன் சூரிய பாலா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. திருப்பதி மூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜேம்சன் ஆகியோர் இருந்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வாகனங்கள் அறிமுக விழா குறித்து சூரிய பாலா ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. திருப்பதி மூர்த்தி மற்றும் பொது மேலாளர் திரு. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கூறும் போது :- இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைன்ஸ் இரண்டு சக்கர வாகனமானது 350 பவர்ஃபுல் சி சி இன்ஜின், முகப்பு விளக்கு ஃபுல் ஹெச்டி கொண்டது ஆகும். மேலும் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோண்டா ஸ்மார்ட் போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுநர் மற்றும் சக பயணிக்கான தனித்தனி இருக்கை வசதி, எஞ்சின் ஸ்டாப்ஸ் சிக்னல், ஹோண்டா ரோடு சிங்க், எஞ்சின் ஆன் மற்றும் ஆப் சுவிட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் வித் இன்ஜின் இன்குபேட்டர் போன்ற நவீன வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

இந்த வாகனங்கள் மூன்று மாடல்களில் கிடைக்கின்றது. முதல் மாடலான டிஎல்எக்ஸ் மாடலில் நான்கு வண்ணங்கள் பிரீசியஸ் ரெட் மெட்டாலிக், பேர்ல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மேசிவ் கிரே மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களிலும், டிஎல்எக்ஸ் ப்ரோ வாகனம் மூன்று நிறங்களிலும் அதாவது ப்ரீசியஸ் ரெட் மெட்டாலிக், பேர்ல் நைட் ஸ்டார் பிளாக் மற்றும் மேட் மேசிவ் கிரே மெட்டாலிக் ஆகிய வண்ணங்களிலும், டி எல் எக்ஸ் ப்ரோ க்ரோம் மாடல் அழகிய மூன்று வண்ணங்களிலும் அதாவது பேர்ல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மேசிவ் கிரே மெட்டாலிக் மற்றும் அத்ளடிக் ப்ளூ மெட்டாலிக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இந்த வாகனத்தின் ஆன் ரோடு விலை ரூபாய் 2,56,856.00 முதல் 2,62,018.00 ஆகும். 

சிபி 350 ஆர் எஸ் வாகனமானது 7 ஒய் ஷேப்டு ஃப்ரண்ட் அலாய் வீல், டிக் டாக் அண்ட் ரோல் சீட், ஸ்போர்ட்டி கிராப் ரெயில், முன்பக்க எல் இ டி லேம்ப ் மற்றும் 100 சீட் எல்இடி லேம்ப், எமர்ஜென்சி ஸ்பாட் சிக்னல், முன்பக்க ஃபோர்க் பூஸ்ட், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக், பவர்ஃபுல் 350 சிசி இன்ஜின், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச், ஹசார்ட் சுவிட்ச், அகலமான 150 க்கு 70-17 டயர் அமைப்பு, அட்வான்ஸ் டிஜிட்டல் அனலாக் மீட்டர், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச், ஹோண்டா செலக்ட் வுழசஙரந கண்ட்ரோல், ஆகிய வசதிகளுடன் மூன்று மாடல்களில் கிடைக்கின்றது. டி எல் எக்ஸ் மேட் மேசிவ் கிரீம் மெட்டாலிக் கலரிலும், டி எல் எக்ஸ் ப்ரோ ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் கலரிலும், பி எல் எக்ஸ் ப்ரோ டூயட் டோன் பேர்ல் ஸ்போர்ட்ஸ் எல்லோ பலரிலும் கிடைக்கின்றன. இந்த வாகனத்தின் ஆன் ரோடு விலை ரூபாய் 2,64,256.00 முதல் 2,67,576.00 ஆகும். 

இன்று நடைபெற்ற விழாவில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சூரிய பாலாக ஹோண்டா வாடிக்கையாளர்கள் சுமார் 20 பேருக்கு புதிய வாகனங்கள் விநியோகிக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

-சீனி, போத்தனூர்.

Comments