பாலத்துறை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "முதல் மரியாதை"!!

கடந்த 37 ஆண்டுக்கு முன்பு தங்களுக்கு பாடம் நடத்திய பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள்  காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் காண்போரிடம் பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம், பாலத்துறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஆசிரியர்களுக்கு கவுரவிப்பு விழா, இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கலை, இலக்கிய திருவிழா என முப்பெரும் விழா நடந்தது. 

கவுரவிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் துண்டு பிரசுரம், பேனர்.

இவ்விழாவில் பாலத்துறை ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன், மதுக்கரை ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றும், தலைமை வகித்தும் பேசினர்.

முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஆர்.கே விக்கிரம பூபதி, புஷ்பராஜ், பொன்னுசாமி, சந்தோஷ்  ஆகியோர்  அனைவரையும்  வரவேற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

https://youtu.be/qEqN4HF0MQY


பாலத்துறை ஊராட்சி நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது முதல் இதுவரை பணியாற்றிய ஓய்வு பெற்ற, இந்நாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் ஆசிரியர்கள் பாமா, அன்னக்கிளி, தனலட்சுமி மற்றும் பாலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, ஆசிரியர் மந்திரமூர்த்தி, சீரபாளையம் பஞ்சாயத்து யூனியன் 

பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி ஓய்வு ஆசிரியர் தனலட்சுமிக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷா, ஆசிரியையும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார கல்வி அதிகாரியுமான ஷர்மிளா, ஆசிரியர்கள்  காந்திமதி, முத்துக்கிளி, மாலதி, மாடசாமி, குப்புராஜ், லூர்து மேரி ஆகியோருக்கு ஊராட்சி தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன், மதுக்கரை ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் சுரேந்திரன் ஆகியோர்  சந்தனமாலை, சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஓய்வு-மூத்த ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணனுக்கு பாலத்துறை ஊராட்சி தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன் சால்வை அணிவித்து பாராட்டினர்.

இதையடுத்து ஆசிரியைகள் பாமா, தனலட்சுமி, அன்னக்கிளி, சீரபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷா, பாலத்துறை பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, ஆசிரியர் மந்திரமூர்த்தி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னுசாமி, ஆர்.கே விக்கிரம பூபதி, புஷ்பராஜ், ரமேஷ்குமார், சிவராமன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் சால்வை அணிவித்தனர்.

பாலத்துறையில் 5-5-2023 வெள்ளிக்கிழமை அரசு நடுநிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற, இந்நாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் கவரவிப்பு விழாவில் அன்னக்கிளி டீச்சருக்கு முன்னாள் மாணவர் ஆர்.கே.விக்கிரம பூபதி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளியில் 35 ஆண்டுக்கு முன்பு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள், ஆசிரியர்கள் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் காண்போரிடம் பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, ஏற்புரை நிகழ்த்தினர். 

ஓய்வு பெற்ற ஆசிரியர் பாமாவுக்கு முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கினார்.

மேலும் இல்லம் தேடி கல்வி  தன்னார்வலர்கள் நிதின்யா, ஹரிணி, பவித்ரா, ஸ்ரீ நிதி ஆகியோர் கல்வி சேவையை பாராட்டி கோவை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் ஜெரால்டு, மதுக்கரை வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோரும், ஊராட்சி தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன் ஆகியோரும் பரிசும், பாராட்டும், சான்றிதழும் வழங்கி ஊக்கம் அளித்தனர். 

சீரபாளையம் அரசு பள்ளி தலைமையாசிரியர் உஷா டீச்சருக்கு முன்னாள் மாணவர் பொன்னுசாமி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் முன்னாள் மாணவர் புஷ்பராஜ் மற்றும் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன்.

முன்னாள் மாணவர்கள் ரமேஷ்குமார், கனகாச்சலம், பாலத்துறை பாலகிருஷ்ணன், மூர்த்தி, ரவி, செனில், ராம்குமார், மவுனிகா, மணிமேகலை, கலையரசி, சத்யா, தமிழழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பாமா டீச்சர் மகன் பிரசன்னா, உஷா டீச்சர் கணவர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். நிகழ்ச்சியை பத்திரிக்கையாளரும் ஊடகவியலாருமான ஆர்.கே விக்கிரம பூபதி, கல்லூரி மாணவிகள் நிதின்யா, பவித்ரா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மூத்த ஆசிரியர்கள் தனலட்சுமி, அன்னக்கிளி, பாமா மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உஷா (சீரபாளையம்), விஜயா (பாலத்துறை), ஆசிரியர் மந்திரமூர்த்தி ஆகியோருக்கு பாலத்துறை ஊராட்சி தலைவர் மகேஷ்வரி சுரேந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் மரியாதை செய்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் யோகாசனங்களை பாலத்துறை அரசு பள்ளி மாணவி கனிஷ்கா நிகழ்த்தி காட்டி அசத்தினார். மேலும் பேச்சு, நாடகம் கலை போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.  முடிவில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி சுரேந்திரன், இல்லம் தேடி கல்வி அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முன்னாள் மாணவர் பாலத்துறை ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 

செய்தி தொகுப்பு : ஊடகவியலாளன், பத்திரிக்கையாளன்,

-ஆர்.கே.விக்கிரம பூபதி

Comments