கோவை அன்னை ஹாஸ்பிடல் மற்றும் பாரதீய ஜனதா செல்வபுரம் மண்டல் மகளிர் அணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசணை முகாம் ..

 


கோவை அன்னை ஹாஸ்பிடல் மற்றும் பாரதீய ஜனதா செல்வபுரம் மண்டல் மகளிர் அணி,ரோட்டரி கிளப் மெரிடியன் ஆகியோர் இணைந்து நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசணை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கோவை ராஜவீதி அன்னை ஹாஸ்பிடல் சார்பாக உடல் பருமன், மகளிர் நலம் மற்றும்  பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்திவ ஆலோசணை முகாம்கள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை தெலுங்குபாளையம் புதூர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் அன்னை ஹாஸ்பிடல் மற்றும் பாரதிய ஜனதா கட்சி செல்வபுரம் மண்டல மகளிர் அணி,ரோட்டரி கிளப் கோயமுத்தூர் மெரிடியன் ஆகியோர் இணைந்து இலவச பொது மருத்துவ ஆலோசணை முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மருத்துவ முகாம் குறித்து, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அன்னை ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலமுருகன் கூறுகையில், தற்போது நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு புறம் இருந்தாலும் நோய்களின் பாதிப்பு மற்றும் நோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்…இந்த முகாமில்,பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள்,கருப்பைநீர்க்கட்டிகள்,பித்தப்பை கற்கள்,வயிற்றுவலி,குடல் இறக்கம் போன்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசணைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

-சீனி, போத்தனூர்.

Comments