கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்!!

-MMH

கோவை மாவட்டம் காரமடை, டாக்டர். ஆர். வி. கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ. சண்முகபிரியா அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். 

காரமடை காவல்துறையினர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள். அவர்கள் பேசிய உரையில், " இன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே போதைப் பொருள் கலாச்சாரம் மிக அதிகமாகி வருகிறது. இதற்கு அடிமையானால் வாழ்க்கை வீணாகும். மன நலமும் உடல் நலமும் பாதிப்படையும். இதனால் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் கேடு என்பதை உணர வேண்டும். வருங்கால இந்தியாவின் தூண்கள் இன்றைய இளைஞர்கள். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது இளைஞர்களின் கடமை. 

ஆகையால் தங்கள் உடன்படிக்கும் நண்பர்கள் யாரேனும் போதைப்பொருள் உபயோகிக்கிறார்கள் அல்லது விற்பனை செய்கிறார்கள் என்பது தெரிந்தால் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் செய்யவும் தயக்கம் காட்டக்கூடாது. தகவல் தெரிவிக்கும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதற்கான தக்க நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளும்" என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்வின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி. உமா பிரியா அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments