ஒட்டப்பிடாரம் சிவன் கோயிலில் சித்திரை பௌர்ணமி பூஜை!!!

-MMH

சித்திரை மாதம்  பௌர்ணமி தினம் வெகு சிறப்பு வாய்ந்ததாகும் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில்  உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில், அமைந்துள்ள அதில்  அருள் தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதசுவாமி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாகம் பிரியாளுக்கு  கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை;   சுமங்கலி பெண்கள் வழிபாடு நடைபெற்றது.

இதேபோன்று ஆலய வளாகத்தில் ஒட்டப்பிடாரம் தெற்கு தெரு குமாரசன் குடும்பத்தின் சார்பில் சிறப்பு  பூஜைகள் மற்றும்  அன்னதானம்  ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 300க்கு மேற்பட்ட  சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு   சிறப்பு பூஜை நடைபெற்றது  சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் , வளையல் , பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ஒட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் திருமதி. ப.முப்பிடாதி என்ற திவ்யா மற்றும் திருக்கோயில் பணியாளர் சண்முகராஜ், ஆறுமுகவள்ளி , திருக்கோயில் திருக்கோவில் அர்ச்சகர் விக்னேஷ் ஹரிஹரன் , மற்றும் பொதுமக்கள்   பலர்   கலந்து கொண்டனர். 

CLICK HERE

நாளைய வரலாறு செய்திக்காக,

 -முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments