கோவை குமரகுரு நிறுவனத்தில் காலநிலை நடவடிக்கை குறித்து இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களிடையே "ஒய்20 டாக் ஆன் கிளைமேட் ஆக்சன்" விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கோவை குமரகுரு நிறுவனத்தில் காலநிலை நடவடிக்கை குறித்து இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒய்20 டாக் ஆன் கிளைமேட் ஆக்சன் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை குமரகுரு நிறுவனங்கள் மற்றும் The Plantterra இணைந்து குமரகுரு வளாகத்தில் Y20 Talk on climate Action நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆறாவது நிர்வாக இயக்குனரும், நார்வே அரசாங்கத்தின் முன்னால் அமைச்சரும், தமிழ்நாடு காலநிலை நடவடிக்கை குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினருமான எரிக் சோல்ஹிம் என்பவர் காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

காலநிலை நடவடிக்கையில் தொழில்நுட்பம் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், காலநிலை நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பையும், பல்வேறு துறைகளின் முன்னெடுப்புகளையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் கல்வி சூழலில் இயற்கை பாதுகாப்பையும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் காலநிலை நடவடிக்கையில் உள்ள பிரச்சனைகள் குறித்து இளைஞர்களிடம் தன்னார்வலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இந்தியாவின் தலைவர் பாலகுமார் தங்கவேலு, வெர்சா ட்ரைவ்ஸ் ப்ரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனரான சுந்தர் முருகானந்தம் , 

ProClime தலைமை நிர்வாக அதிகாரியான கவின் குமார் கந்தசாமி மற்றும் Beyond Sustainability - யின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹரி ப்ரசாத், குமரகுரு நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன், PSGCAS இல் தகவல் தொடர்பின் தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் , சிறுதுளியின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரான சுஜனி பாலு மற்றும் அருளகத்தின் இணை நிறுவனரான எஸ் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு காலநிலை குறித்து உரையாற்றினர்.

-சீனி, போத்தனூர்.

Comments