புகழ்பெற்ற நாகலாபுரம் முளைப்பாரி திருவிழா களைக்கட்டிய காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீகாளியம்மன் மற்றும் ஸ்ரீபுது அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த அம்மன் திருக்கோவில்களில் வருடம் தோறும் வைகாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், இந்த வருட வைகாசி திருவிழா நேற்று தொடங்கியது. வைகாசி பொங்கல் உற்சவ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டியதுடன் முளைப்பாரி வளர்த்து வந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வைகாசி பொங்கல் உற்சவ திருவிழாவின் இரண்டாம் விழாவாக நேற்று ஊரின் முக்கிய வீதிகளில் அம்மன் கரகத்துடன் முளைப்பாரியினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அம்மன் கோவிலில் வைத்து இறை வழிபாடு மற்றும் விசேஷ பூஜைகளை நடத்தி குளத்தில் முளைப்பாரியினை கரைத்தனர். முளைப்பாரி ஊர்வலத்திற்க்கு முன் மாஸ்டர் சிவலிங்கம் தலைமையில் sss சிலம்பாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மற்றும் புது அம்மன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்களுடன் ஒன்றினைந்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments