கோவை சுந்தராபுரம் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு!!!

கோவை போத்தனூர் அடுத்த குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் ஹாரூன் பாஷா (24) என்பவர் மீது ரேஷன் அரிசி கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனால் அடிக்கடி வழக்கு விசாரணைக்காக போலீசார் அப்துல் ஜபாரின் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. போலீசார் அடிக்கடி வருவதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மனமுடைந்த அப்துல் ஜபார் சுந்தராபுரம் சாரதா மில் சந்திப்பில் உள்ள செந்தில்குமார் என்பரது வீட்டின் மேலே இருந்த செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போத்தனூர் உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ், ஜபாருடன் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவரை கீழே இறக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments