மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் பிஎன்சி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான முதல் அனுபவ மையம் கோவையில் திறப்பு!!

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஎன்சி மோட்டார்ஸ் 'இன்டோஷெல் பிஎன்சி' என்னும் பெயரில் முதல் அனுபவ மையத்தை கோவையில் திறந்துள்ளது. சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தை இன்டோஷெல் மோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகதீசன் திறந்து வைத்தார். 

இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்களின் சொந்த ஊரான கோவையில் எங்களின் புதிய டீலர்ஷிப்பை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரியானது இந்தியாவில் உள்ள பிற இரு சக்கர வாகனங்களின் பேட்டரியைவிட சிறந்ததாகும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் எங்களின் வாகனங்கள் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் புதுமையான சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கட்டமைப்புடன் உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. எங்களின் வாகனங்கள் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த வாகனங்களுக்கான 75 சதவீத உதிரி பாகங்களும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்த இடத்தை அடைவதற்காக எங்கள் நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

மின்சார வாகன உற்பத்தியல் கோவை நகரை உலக அளவில் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். கோவையை பொறுத்தவரை புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். எனவே மக்களின் ஆதரவுடன் இதை எங்களால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

தற்போது பிஎன்சி நிறுவனம் பிஎன்சி சேலஞசர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 2 புதிய வாகனங்களை அறிமுகம் செய்தது. அவை வரும் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. சிங்கிள் சார்ஜ் முறையில் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. செல்லும். இது மணிக்கு 75 கி.மீ. வேகம் செல்லும் திறன் கொண்டது. இதன் எக்ஸ்–ஷோரூம் விலை 1,18,225 ரூபாய் ஆகும்.

-சீனி, போத்தனூர்.

Comments