மாமன்னன் திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழர் விடியல் கட்சி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை!!

தமிழர் விடியல் கட்சி தலைமையில் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

தமிழ் திரைப்பட வரலாற்றில் தற்போது வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படம் சாதிய படிநிலைகளை சமநிலைக்கு கொண்டு வருவதற்கான மாபெரும் வரலாற்று திரைக்காவியம். இந்த மாமன்னன் திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்துவதற்கான திரைப்படமாக அமையப்போவதில்லை. காரணம் திரைப்படத்தின் இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சாதி வேறுபாடுகள் இந்த தமிழ் சமூகத்தில் எவ்வாறு தலைதூக்கி இருக்கிறது என்பதை உலகிற்கு வெட்ட வெளிச்சம் ஆக்கினார். அதைப்போலவே இந்த மாமன்னன் திரைப்படமும் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் கருதுகிறார்கள் இது மட்டுமல்ல தற்போது திமுக ஆட்சியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மாமன்னன் படத்தில் கதாநாயகனாக தோன்றுகின்றார். 

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஒரு கட்சியின் அமைச்சர் நடித்த திரைப்படம் கண்டிப்பாக சாதிய மோதல்களை உருவாக்காது. அப்படி இந்த மாமன்னன் திரைப்படம் சாதி மோதல்களை உருவாக்கும் என்று நினைத்தால் கண்டிப்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் நடித்திருக்க மாட்டார். மாமன்னன் திரைப்படம் என்பது சமூகத்தில் இருக்கும் சாதி வேறுபாடுகளை கலையுமே தவிர சாதி பிரச்சினையை கண்டிப்பாக உருவாக்காது. ஆகையால் இந்த மாமன்னன் திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த விதமாகவும், மாமன்னன் திரைப்படத்தின் இயக்குனர் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு பாதுகாப்பு தரும்படியாகவும், இந்த மாமன்னன் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படியாகும் மரியாதைக்குரிய காவல்துறை கண்காணிப்பு அவர்களை கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம் என்ற கோரிக்கை மனு இன்று 28.06.23 நண்பகல் 12. 30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ,மனிதநேய மக்கள் கட்சி தமிழ் புலிகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments