எங்கள யாரும் அடிக்க முடியாது.. நான் திருப்பி அடிச்சா.. தாங்க முடியாது! கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய திமுகவினரின் போஸ்டர்!!


அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 3 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என  முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் இது சம்பந்தமாக  கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவி-னர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 


சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் திமுக காரனை சீண்டி பாக்காதீங்க இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் கலைஞர் கருணாநிதி கூறிய எங்கள யாரும் அடிக்க முடியாது நான் திருப்பி அடிச்சா உங்களால முடியாது என  குறிப்பிட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதே சமயம் இந்த போஸ்டர்களால் எந்த மாதிரி பிரச்சினைகள் உருவெடுக்கும் என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பொதுமக்கள். 

-M.சுரேஷ்குமார்.

Comments