ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு என்ற முகநூலில் பெரியார் படம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது!!

தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் சப்போர்ட் ஃபெடரேஷன் (ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு) என்ற பெயரில் முகநூல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தலைப்பில் இயங்குகிற முகநூல் பக்கத்தில் ப்ரொபைல் போட்டோவாக தந்தை பெரியார் அவர்களின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. 

தந்தை பெரியார் அவர்கள் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கான மக்கள் போராட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்தி காட்டி அதில் வெற்றியும் பெற்றவர். ஆனால் மண்ணின் வளம், மனித சுவாசம், சுற்றுப்புற சூழல் சீர்கேடு, ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்த ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இயங்குகின்ற இந்த முகநூல் பக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் படம் குறிக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாக அமைந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அது மட்டுமல்ல நீதிக்கான போராட்டம் பல லட்சக்கணக்கான மக்களை வாழ செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 உயிர்கள் பலியாக உள்ளன. அப்படிப்பட்ட உயிர் பலி கொண்ட இந்த நச்சாலை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தந்தை பெரியார் அவர்களின் படம் பொறிக்கப்பட்டது என்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது .

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள், ஆதரவாளர்கள், பெரியாரை உணர்ந்து கொண்டவர்கள், அனைவரும் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடி வருகிறோம். அப்படிப்பட்ட இந்த சூழலில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற சிந்தனையோடு பெரியார் படம் குறிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம். எனவே இந்த விஷயத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தந்தை பெரியார் அவர்கள் படம் எடுக்கப்பட்டதை நீக்குவதாகவும், சட்டத்தின் படி நடப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த முகநூல் பெரியார் படம் நீக்கப்படவில்லை என்று வரும் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். 

எனவே பெரியாரிய உணர்வாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள், பெரியாரி ஆதரவாளர்கள், அம்பேத்கர் ஆதரவாளர்கள், காரல் மார்க்ஸ் ஆதரவாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஸ்டெர்லைட் எதிரான கூட்டமைப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments