தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் தகவல்!!

 "தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வாயிலாக தொடங்கப்பட்டு "மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-2" என்ற முகவரியில் கடந்த 25 ஆண்டுகளாக மிக சிறப்பாக இயங்கி வருகிறது. 

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. 

இசைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவ - மாணவியர்களுக்கு வயது வரம்பு 12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். மூன்றாண்டுகள் முழு நேரமாக பயில வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.350ம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325- மட்டும் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, இரயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி வசதி மாதம் தோறும் மாணவர்களுக்கு தலா  ரூ.400 கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மிதி வண்டி மற்றும் இலவசகாலணி ஆகியன அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழகள் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவுமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும்  இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருகோயில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மேலும் வளாக நேர்காணல் வாயிலாக தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவ-மாணவியர்களும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையினைக் கற்று இசை ஆசிரியர்களாகவும் கலை வல்லுநர்களாகவும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு (தொலைபேசிஎண்: 0461-2300605 கைப்பேசிஎண். 94877 39296) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments