தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்க SDPI கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!!

-MMH

தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்க கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரிஷ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி கோவை மத்திய  மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பா.ஜ.க.எம்.பி.யும் ஆன  பிரிஜ் பூஷன் சரண் சிங்  பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய கோரி நாட்டின் முன்னனி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ.கட்சி நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, SDPI கட்சி கோவை மத்திய  மாவட்டம் சார்பாக,பா.ஜ.க.எம்.பி.பிரிஜ் பூஷன் சரண் சிங்கை  கைது செய்து  சிறையில் அடைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், SDPI கட்சி கோவை   மாவட்ட செயலாளர்  முஹம்மது இசாக் தலைமை தாங்கினார்.. இதில் கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜாஉசேன்   கண்டன உரை நிகழ்த்தினார். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முகமது இக்பால்,மாவட்ட துணைத் தலைவர்கள் சிவக்குமார், அப்துல் ரஹிம்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஹசன் பாதுசா,தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மற்றும் செயலாளர் பஷிர்,செய்தி தொடர்பாளர் மன்சூர்,விமன் இந்தியா மாவட்ட தலைவி காமிலா செயலாளர் சாஜிதா,மண்டல தலைவர் பரிதா  உட்பட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், பெண்கள் பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments