கோவையில் 2023-25 ஆம் ஆண்டுக்கான ஸ்கால் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது!!

-MMH

கோவையில் 2023-25 ஆம் ஆண்டுக்கான  ஸ்கால் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் குறித்த நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது.

சர்வதேச மற்றும் உள்நாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் இணைக்கும் விதமாக ஸகால் கிளப் செயல்பட்டு வருகிறது.சுற்றுலா செல்ல விரும்புவோர் மற்றும் சுற்றுலா துறை  வணிக தொடர்புகளை இணைக்கும் விதமாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் உறுப்பினராக உள்ளனர்.இந்நலையில் ஸ்கால் அமைப்பின் 2023-25 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

ஸ்கால் இந்தியா அமைப்பின் தலைவர் கார்லிஸ்லே வாஸ் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் கோவை மாவட்டத்தை நினைவு கூறும் விதமாக மாவட்டத்தின் சுற்றுலா பகுதிகள், வழிபாட்டு தளங்கள், பல்வேறு சிறப்பு தகவல்கள் அடங்கிய நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.நிகழ்ச்சியில் ஸ்கால் இந்திய அமைப்பின் செயலாளர் கிருஷ்ண கோபாலன்,கோவை டெரியர் கமாண்டிங் அதிகாரி தினேஷ் சிங் தன்வர்,தென்னிந்திய ஓட்டல் மற்றும் உணவக சங்க செயல் இயக்குனர் சுந்தர் சிங்காரம் உட்பட முன்னாள் மற்றும் புதிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments