5 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வளாகத்தில் இருந்து பேரணி துவங்கியது அரசு மருத்துவமனை, விவிடி  சிக்னல் வழியாக சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின்   முக்கிய கோரிக்கைகள்:

5 லட்சம் அரசு காலி பணியிடங்களை  உடனடியாக நிரப்பிட கோரிக்கை, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை  அனைவருக்கும் அமல்படுத்த கோரிக்கை, சிறப்புக்  காலமுறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்திட கோரிக்கை, கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட கோரிக்கை என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here..

குறிப்பாக அவுட்சோர்சிங் முறையை அரசு கைவிட கோரிக்கை வைத்தனர், எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசினை செய்யவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம் இல்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என ஊழியர்கள் முழக்கம்.

பின்னர் மகளிர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தூர் ராஜன் மாவட்ட தலைவன்,  திரவியம்  தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வுதியர் சங்கம்,   முருகன் மாவட்ட செயலாளர், வெங்கடேசன் மாநில துணை செயலாளர் தமிழரசன் மாவட்ட பொருளாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு  செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments