ஹவ்மோர் உயர்தர ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் தென்னிந்தியாவின் 50வது கிளை கோவையில்!!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மக்கள், மிகவும் விரும்பி உண்ணும், ஐஸ்கிரீம் தயாரிப்புகளான, ஹவ்மோர் ஐஸ்கிரீம், தென்னிந்தியாவில், தனது 50வது கிளையை இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில், திறந்தது. இதனை தொடர்ந்து இக்கிளையின் உரிமையாளர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாடு முழுவதும், லாட்டி வெல் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பல்வேறு தயாரிப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனியில் இக்கிளையை துவக்கியுள்ளதாகவும்,  வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, உடனுக்குடன் தயார் படுத்த பட்டு வழங்குவதாகவும், முழுக்க முழுக்க பசும் பாலை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்க படுகிறது, இதனால் இதன் சுவை எளிதில் மக்கள் மறக்க முடியாததாக அமைகின்றது என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

78 வருட காலமாக, இந்த நிறுவனம் ஐஸ்கிரீம் தயாரிகப்புகளை  மக்கள் மத்தியில் சந்தை படுத்தியுள்ளது, பான் ஐஸ்கிரீம்' மற்றும் ராஜ்வாடி குல்ஃபி, ஃபாலூடா முதல் நட்டி பெல்ஜியன் டார்க் சாக்லேட், மோச்சா பிரவுனி ஃபட்ஜ்  போன்ற பிரீமியம் சுவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இக்கிளையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச வை பை வழங்குவதுடன், பிறந்தநாள், விழாக்களுக்கு சிறப்பான இட வசதிகளையும் வழங்குவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments