சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 52 பதக்கங்கள் வென்ற கோவை மாணவ மாணவிகள்!!

  -MMH

   கோவை சின்ன வேடம்பட்டி முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 17 மாணவ மாணவிகள் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 52 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு  தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற  , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூரில் இன்டர்நேஷனல் இன்விடேஷன் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023 எனும் சர்வதேச போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக முல்லை தற்காப்பு கழகத்தில் பயிற்சி பெறும் 17 மாணவ,மாணவிகள்  தலைமை பயிற்சியாளரான  பிரகாஷ்ராஜ் தலைமையில்  கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள்வால் மான் கொம்பு வேல் கம்பு சண்டை அடிமுறை ஆகிய போட்டிகளில் 8 தங்கம் 15 வெள்ளி 29 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்று முல்லை தற்காப்பு கலை பயிற்சி மாணவ, மாணவிகள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.. மேலும் இந்த போட்டியில்  ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பெற்றும் சாதனை படைத்தனர்.


இந்நிலையில் வெற்றி பதக்கங்களுடன் கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார் தொடர்ந்து அனைவரும் இணைந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் ராமமூர்த்தி கவிதா சௌந்தரராஜன் மற்றும் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றியுடன் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments