திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் பள்ளியில் அரசபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம்  நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்  வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற  திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கௌரவிக்கப்பட்டவர்களின் விவரம் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த செல்வி க.ரூபிகா,இரண்டாவது இடம் பிடித்த செல்வி செ. தமிழ் பாரதி,மூன்றாவது இடம் பிடித்த செல்வி கு.வேத தர்ஷினி மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த செல்வி ச.சீதா ஈஸ்வரி, இரண்டாவது இடம் பிடித்த செல்வி ச.பத்மப்ரியா, மூன்றாவது இடம் பிடித்த செல்வி வி.பவானி.

இவ்விழாவிற்கு A.P.J அப்துல் கலாம் இயக்கம் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் திருமதி லதா அவர்கள் முன்னிலை வகித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில்   துணைத்தலைவர் அபிறுத்தின், செயலாளர் அசார், பொருளாளர்  மணிகண்டன், 

ஜோயல், ஆகாஷ், ஸ்ரீ வர்ஷன், சுதர்சன், லோகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவாக  ஆகாஷ் நன்றி உரை வழங்கினார். நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவது இல்லை. என்ற A.P.J.அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையோடு 

-M.சுரேஷ்குமார்.

Comments