ஒட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டியில் டாட்டா ஏசி லோடு வண்டி திருட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டி  அருகேயுள்ள AKS கிரசர் கம்பெனியில்  திருநெல்வேலியை சேர்ந்த கணேசன் நடத்தி வருகிறார்,  இதில் நாகப்பன் வயது 25 தகப்பனார் பெயர் முருகன் வடக்கு தெரு கிலாங்குளம் பேரையூர் மதுரை மற்றும் அய்யனார் வயது 32 தகப்பனார் பெயர் வீரண்ணன் கல்லுப்பட்டி மதுரை இந்த இருவரும் கடந்த 10 நாட்களாக ஏ கே எஸ் கிரேசர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் நேற்று இரவு கம்பெனி டாட்டா ஏஸ் வாகனத்தை குடிபோதையில் ஊருக்கு எடுத்து சென்று விட்டனர் கம்பெனி உரிமையாளர் இருவருக்கும் போன் செய்து விசாரித்த பொழுது சரியான தகவல் தராமல் போன் இணைப்பை துண்டித்துள்ளார்கள் இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் ஓட்டப்பிடாரம் காவல்துறையினிடம் புகார் செய்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை  செய்தபோது வண்டி கோவில்பட்டி அருகில் இருப்பதாக தகவல் கிடைத்தது இருவரையும் கைது செய்து விசாரித்து  வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments