ஜோதிடம் பார்ப்பதாக கூறி இளம் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற ஆசாமியால் பரபரப்பு!!!

 

-MMH

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகள் 25 வயதான அகிலா, இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார் அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அங்கு வந்துள்ளார், அவரிடம் அகிலா தனது எதிர்கால பலனை பார்த்து சொல்லுமாறு கூறியிருக்கிறார், அப்போது அந்த ஜோதிடர் நிறைய பிரச்சனைகள் இருப்பதாகவும் ஒரு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் அந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம் என கூறியிருக்கிறார்,

இதனை அகிலா நம்பி சிறப்பு பூஜையை உடனே செய்யும்படி கூறியிருக்கிறார், சிறப்பு பூஜைக்காக வீட்டில் இருந்து ஒரு தட்டு மற்றும் டம்ளரை கொண்டுவர கூறி இருக்கிறார் அகிலாவும் கொண்டுவந்து கொடுத்துள்ளார், பின்னர் வீட்டின் அறையில் வைத்து பூஜை செய்வது போல அந்த நபர் செய்துள்ளார், பின்னர் அகிலா கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பூஜையில் வைக்குமாறு கூறியிருக்கிறார்,

அகிலாவும் அதை நம்பி தனது தங்கச் செயினை கழற்றி வைத்துள்ளார், சிறிது நேரம் பூஜை செய்வது போல அந்த நபர் இருந்துள்ளார், அகிலா சமையலறைக்கு சென்று விட்டு வருவதற்குள் அந்த ஜோதிடர் வீட்டிலிருந்து மாயமாகி இருந்தார். பின்னர் அகிலா வீட்டை விட்டு வெளியே வந்து தேடி பார்த்தார், அந்த ஜோதிடர் எங்கும் கிடைக்கவில்லை. ஜோதிடம் சொல்வது போல வந்து சிறப்பு பூஜை செய்வதாக கூறி நகையை ஏமாற்றி திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் அகிலா குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments