அ.தி.மு.க கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மதுரையில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் மாவூத்தன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திர பாண்டி வயது(46). விவசாயியான இவர், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். 

தொடர்ந்து நான்கு முறை கவுன்சிலராக பதவி வகித்து வரும் இவர் நேற்று பாலமேடு அருகே உள்ள லிங்காவடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் அம்மையநாயக்கனூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பாலமேடு மாணிக்கம்பட்டி கண்மாய் அருகே அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பாலமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட சந்திரபாண்டி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால், 

அந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பழிக்கு பலியாக இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாமா? இல்லை வேறேதும் காரணாமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் மதுரை பாலமேடு அருகில் பட்டப் பகலில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-தமிழரசன், மேலூர்.

Comments