பி.எம்.ஜெ ஜூவல்ஸின் மிகப்பெரிய நகைக் கண்காட்சி!!

-MMH

பிரபல பி.எம்.ஜெ ஜூவல்ஸ், கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள  ஷோ ரூமில் முதலாவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடியது. அதன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பி.எம்.ஜெ  ஜூவல்ஸ் மிகப்பெரிய தங்க மற்றும் வைர நகைக் கண்காட்சியை நடத்தியது.  இதில் மிகப்பெரிய வைரம், தங்கம் மற்றும் போல்கி நகைகள் சேகரிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக  ஃபேஷன் ஐகான், டாக்டர் ஜெய மகேஷ், பி.எம்.ஜெ ஜூவல்ஸ்ன் இந்தியா & இன்டர்நேஷனல் சந்தைப்படுத்தல் தலைவர் அனூப் கருணாகரன், பி.எம்.ஜெ ஜூவல்ஸ் தமிழ்நாடு வணிகத் தலைவர் செந்தில் குமார் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சி இன்று முதல்  ஜூலை 10ம் தேதி வரை  கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் 10,000 மேற்பட்ட கைவினைப் படைப்புகள் கொண்ட நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் திருமண நகைகள் (தங்கம் மற்றும் வைரம்) தினசரி அணிகலன்கள் மற்றும் பண்டிகை கால நகைகள் , அலுவலகம், பார்ட்டி மற்றும் வழக்கமான உடைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற நகைகள் காட்சிப்படுத்தப்படுள்ளது. 

பி.எம்.ஜெ  ஜூவல்ஸ், தங்கத்தில் கைவினைப்பெற்ற திருமண சேகரிப்புகள் மற்றும் அனைத்து வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள், தூய்மையான வைரங்கள், வெட்டப்படாத, போல்கி மற்றும் அரிதான கற்கள் - ரூபி, சபையர், மரகதம் ஆகியவை அடங்கும். பி.எம்.ஜெ  ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் நகைகளை உருவாக்குகிறது.

தலைமை விருந்தினர் டாக்டர் ஜெய மகேஷ், நிகிழ்சியை தொடங்கி வைத்து பேசிகையில் பி.எம்.ஜெ ஜூவல்ஸ் கோயம்புத்தூர் இந்த மைல்கல்லைப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். பி.எம்.ஜெ ஜூவல்ஸ் நிர்வாகம் மற்றும் அதன் கோயம்புத்தூர் ஸ்டோரின் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

கடந்த 1 வருடத்தில் பெற்ற வடிவமைப்புகள் மற்றும் சேவைகளால்  தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒரு வாடிக்கையாளர் நான் என்றும், வரும் காலங்களில் கோவை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நகைக்கடை ஆர்வலர்கள் அனைவரையும் கவரும் வகையில் அவர்கள் அனைவரும் வெற்றியும், நல்வாழ்த்துக்களும் பெற வாழ்த்துகிறேன் என்றார்.

தமிழ்நாடு பி.எம்.ஜெ  ஜூவல்ஸ் வணிகத் தலைவர் செந்தில் குமார் நடராஜன் தனது 1-வது ஆண்டு விழாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், “கோயம்புத்தூர் கடையின் முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எனவும்  கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நகைப் பிரியர்களுக்கும் நன்றி.  எங்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,பி.எம்.ஜெ  ஜூவல்ஸ், எப்போதும் சிறந்த வடிவமைப்புகளைத் தேடும் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக மிகப்பெரிய நகைக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. 

எங்களுடன் இணைந்து எங்களை வாழ்த்திய டாக்டர் ஜெய மகேஷ் அவர்களுக்கு  நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். எங்களின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, பி.எம்.ஜெ ஜூவல்ஸ் கோயம்புத்தூர் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது. 

கடையில் காண்பிக்கப்படும் வடிவமைப்புகள் சிறந்த தரம் மற்றும் சலுகை விலையில் கிடைக்கும். எங்கள் கடைக்கு வரும் ஒவ்வொரு பார்வையாளர்களும் எங்கள் சமீபத்திய மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

அனூப் கருணாகரன், சந்தைப்படுத்தல் தலைவர் - இந்தியா & இன்டர்நேஷனல் பேசுகையில், “தமிழகத்தில் எங்களது வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரில் அதிக கடைகளுடன் தமிழ்நாடு முழுவதும் பி.எம்.ஜெ ஜூவல்ஸ் கால்தடத்தை அதிகரிக்க இருக்கிறோம். கோயம்புத்தூரில் உள்ள அனைத்து அற்புதமான மற்றும் அன்பான மக்கள் மத்தியில் எங்கள் நகைகள் வீட்டுப் பெயராக மாறுவதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments