கோவையில் பரபரப்பு!! டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !!!

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். 

பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பந்தய சாலை பகுதியிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது வரை தற்கொலைக்கான காரணங்கள் வெளிவராத நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments