இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது!!

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 139 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 70-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 4 ஆட்டத்தில் முடிவில்லை. 2 ஆட்டம் டையில் முடிந்தது. ஆனால் இவ்விரு அணிகள் சந்தித்த கடைசி 8 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகேஷ்குமார்.

வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், கேசி கர்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது ஆலிக் அதானேஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர், அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி அல்லது யானிக் காரியா அல்லது ஒஷானே தாமஸ், ஜெய்டன் சீலஸ். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments