ஓட்டப்பிடாரம் அருகே ராமச்சந்திரபுரத்தில் கை,கால்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ராமச்சந்திரபுரத்தில் நேற்று இரவு 11 மணியளவில் பைக்கில் சென்ற முத்துராமலிங்கத்தின் கை கால்களை கட்டிபோட்டு 8 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சார்ந்த முத்துராமலிங்கம் வயது  48 தகப்பனார் பெயர் ஆறுமுகநாயனார் கோவில்பட்டியை சார்ந்த இவர் தூத்துக்குடி கயத்தார் கோவில்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் நகை  மோசடியில் ஈடுபட்டு இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here...

குண்டாசில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் நகையை கொடுத்து ஏமாந்தவருக்கு நகைக்கான பணத்தை திருப்பித் தருவதற்காக  9.7.2023 அன்று இரவு சுமார் 10.30 மணியளவில்  வந்த பொழுது தான் வந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக ஜேக்கப் என்பவருக்கு போன் செய்து விபரங்களை கூறியுள்ளார்.உடனே

ஜேக்கப் வந்து பார்த்த போது முத்துராமலிங்கத்தின்  கை,கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் பைக் எரிந்த நிலையிலும் இருந்ததை பார்த்து ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments