தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோருடன் சந்திப்பு!!!

திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 

திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞரணி தான். திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இளைஞரணி பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்தார். அதில் துடிப்புடன் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பரிந்துரையின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அழப்பாளராக V.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் CM.மதியழகன் தலைமையில்  தூத்துக்குடிக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மரியாதைக்குரிய  பி.கீதாஜீவன்‌ Mcom அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி  மேயர்  ஜெகன் பெரியசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments