வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும்! திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவகமான கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் : 

தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவுபடி நடைபெறும் பாக முகவர்கள் கூட்டமானது முக்கியமான தேர்தல் களத்தில் தங்களது பகுதியில் பணியாற்றக்கூடிய கட்சியின் ஆனிவேராக இருப்பவர்கள் நீங்கள் தான் உங்கள் பகுதியில் யார் குடியிருக்கிறார்கள் யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

யார் மறைந்துள்ளார்கள் என்ற புள்ளி விபரங்கள் உங்களுக்கு தான் தெரியும் தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் சேர்ப்பு நீக்கம் முகவரி மாற்றம் என ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதை அனைவரும் முறையாக பின்பற்றி அந்த பட்டியலை சரிபார்த்து மக்கள் பணியை முறையாக செய்ய வேண்டும். அதே போல் வாக்குச்சாவடி இடம் தூரமாக இருந்தால் அருகாமையில் மாற்றுஇடம் இருக்குமேயானால் அதை தெரிவித்தால் மக்களின் வசதிக்கேற்ப அதை அதிகாரிகளிடம் முறையாக தெரிவித்து மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

அக்டோபர் 17ல் வெளியிடப்படும் தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலை பெற்று உடனடியாக அந்தபணியை செய்திட வேண்டும் 1.1.24 அன்று 18வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு தகுதி ஏற்புடையவர்களாக உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து பெயர் சேர்க்கும் பணிகளையும் செய்ய வேண்டும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கட்சிப்பணியை திட்டமிட்டு முறையாக பாக முகவர்கள் உள்ளிட்ட அந்தபகுதியில் உள்ள  கழக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடுவீடாக சென்று சரிபார்ப்பதின் மூலம் நாம் முறையான பட்டியலை உருவாக்க முடியும் இதற்கு நீங்கள் பணிசெய்திட வேண்டும். அதிகாரிகளிடம் கருத்துக்களை தெரிவியுங்கள் அதில் ஏதுவும் குறை இருந்தால் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளாட்சி ஆகிய 3 தேர்தலுக்கும் பட்டியல் வேறுபடும். 

என்பதை கருத்தில் கொண்டு கவனமாக இன்னும் 6 மாதகாலம் பணியாற்ற வேண்டும் ஜனவரியில் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நமக்கு தளபதியார் கூறியது போல் முக்கியமான தேர்தல் அந்த இலக்கை அடையும் வரை உறுதியுடன் பணியாற்றி இறுதி வெற்றியை கைப்பற்ற அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், இராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் நாகராஜன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, 

துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, மாநகர அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், செல்வின், ரவி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சக்திவேல், மாநில பேச்சாளர்கள் இருதயராஜ், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், வட்டச்செயலாளர்கள் ரவிசந்திரன், பாலகுருசாமி, கங்காராஜேஷ், பொன்ராஜ், சதிஷ்குமார், சுப்பையா, லியோஜான்சன், செல்வராஜ், ரவீந்திரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ரெக்ஸ்லின், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments