வெளிநாட்டில் வேலை தனியார் நிறுவனம் மோசடி!! மக்களே உஷார்!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார்: அங்கமாலி ஐக் சோன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல் ,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 300 நபர்களை ஏமாற்றி நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் வசூல் செய்துள்ளனர். ஒரு வீட்டில் மட்டுமே 27 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர் நாட்கள் கடந்த பின்னரும் விசா புராசஸ் முடிந்து வரவில்லை என்று சொல்லி நாட்களைக் கடத்தியுள்ளனர்.

அதனை அடுத்து பணத்தை இழந்தவர்கள் சென்று கேட்ட பொழுது அவர்களுக்கு முன்னுக்குப் பின்னாக பதில் அளித்துள்ளனர் அடுத்த நாள் வர கூறியுள்ளனர் மறுநாள் வந்து பார்க்கும் பொழுது நிறுவனம் மூடப்பட்டுள்ளது அவருடைய தொலைபேசி எண்களும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் அவர்களை காவல்துறையினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான லில்லி சிஜிமோன் என்பவரை திருவனந்தபுரத்திலும் முறிக்கந்தொட்டியை சேர்ந்த லில்லி மோல் என்பவரை எர்ணாகுளம் பகுதியில் பெண்கள் தங்கும் தனியார் விடுதியில் மாறி மாறி தங்கி வருவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு அவரையும் கைது செய்தார் இரண்டு பேரையும் மெஜிஸ்ட்ரேட்டிடம் ஒப்படைத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்த பொழுது மேலும் பல தகவல்கள் அவர்களிடமிருந்து கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் யாவரும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களின் மீது பணத்தை செலுத்தி விட்டு ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது பல நிறுவனங்கள் இவ்வாறான மோசடி கும்பல்களாக செயல்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments