இயற்கை குறித்த அனைத்து அம்சங்களையும் விவாதிக்க வேண்டும் - குமரகுரு நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் உரை!!

இயற்கை குறித்த அனைத்து அம்சங்க ளையும் விவாதிக்க வேண்டும் என்று குமரகுரு நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் தெரிவித்துள்ளார். வெப்பமண்டல உயிரியல் பாதுகாப்பு சங்கத்தின் 59 ஆவது மாநாடு குமரகுரு கல்வி நிறுவனத்தில் தொடங்கியது. இந்த மாநாடு ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் குமரகுரு நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் ஒரு பில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். பல மொழிகள், பல்வேறு சமூ என்றார். கங்கள் மற்றும் கலாசாரங்களின் தாயகமாக உள்ளது. மேலும், 91 ஆயிரம் விலங்கினங்களுக்கும்,45 ஆயிரம் தாவர இனங்களுக்கும் தாயகமாக உள்ளது.

ஆனால், மனிதர்கள் வளர்ந்த விதத்தால் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகிறோம். அனைவரும் பூமியின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த மாநாடு நடத்தப் படுகிறது. இந்த மாநாட்டில் இயற்கை தொடர்பான அனைத்து அம்சங் களையும் விவாதிக்க வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வெப்ப மண்டல உயிரியல் சங்கத்தின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், அறிவியல், பாதுகாப்பு, மேம்படுத்துதல், பன்முகத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை குறிக்கோளாக இந்த மாநாடு கொண்டுள்ளது. 35 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டாலும், ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்."

இதில், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், இந்திய வன விலங்கு நிறுவனம், இயற்கை வர லாறு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஓசை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம், உதகை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக ளைச் சேர்ந்த 35 நாடுகளின் பிர திநிதிகள் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments