பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கடல் கடந்து வந்த நண்பர்கள்!! கோவையில் நெகிழ்ச்சி!!

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் 1994-98 ஆம் ஆம் ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. 

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடைபெற்ற இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில், 25 ஆண்டுக்கு முந்தைய நட்புக்காக கடல் கடந்து நண்பர்கள் வந்திருந்தனர். பொறியியல் துறையில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இந்நாள் பொறியாளர்கள், கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அனைவரும் கல்லூரியில் மீண்டும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது கடந்தகால நினைவுகளை நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டனர். 1994 ஆம் ஆண்டு முதல் 98 ஆம் ஆண்டு வரை இணைந்து படித்து, 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் தங்கள் உடன் படித்த நண்பர்களையும் பயின்ற கல்லூரி ஆசிரியர்களையும் சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு வருடங்களாக திட்டமிடப்பட்டு இந்த மகிழ்வான நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும், இதில் பங்கேற்ற அனைவரும் கல்லூரி காலத்தில் சேர்ந்து படித்த நண்பர்களை 25 ஆண்டுகள் கழித்து சந்தித்தது தங்களது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்றும், கல்லூரியில் தற்போது இருப்பது பழைய பொக்கிஷ நினைவுகளை மீட்டு எடுத்திருப்பதாக நெகிழ்வுடன் தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் தங்களது நண்பர்களையும், ஆசிரியர்களையும் தாங்கள் படித்த கல்லூரிலேயே சந்தித்தது மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவியும், கைகளை பற்றியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு விருது கொடுத்து நினைவு பரிசுகளையும் வழங்கியும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments