சுப்பே கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!!

-MMH

பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பேகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 

மேலும் இவ்விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கர்மவீரர் காமராஜரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் சில முக்கிய குறிப்புகளை எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் எம். மோகன்ராஜ் துணைத்தலைவர் வி. உதயகுமார் செயலர் என். மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments