சாலையில் அழுதுகொண்டு தவித்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசாருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு!

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக்நகர் மெயின் ரோட்டில் நேற்று மாலை 8 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லியரசன், தலைமை காவலர் சிவகுமார், 

முதல் நிலை காவலர் திரு, சந்தானகுமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது, அந்த சிறுமி பாரதி நகர் பகுதியில் பெற்றோரின் துணை இல்லாமல் தனது பாட்டி கருப்பாயி என்பவருடன் வசித்து வருவதாகவும், மேற்படி பாட்டி இன்று காலையிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்பதால் சிறுமி தனது பாட்டியை தேடி ஸ்பிக்நகர் மெயின் ரோட்டில் தனியாக நின்று கொண்டிருந்ததாகவும் தெரியவந்தது. 

உடனே போலீசார் 8 வயது சிறுமியை மீட்டு தூத்துக்குடி சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் சங்கரேஸ்வரி என்பவர் மூலமாக தூத்துக்குடி அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்த முத்தையாபுரம் போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments