ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்!!

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கொடுத்துள்ள அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை தாங்கள் வரும் வாகனங்களை மலைப்பாதையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தி புகைப்படம் எடுப்பது மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது போன்று வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில்  வனத்துறை தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்துகள் வளைந்து செல்வதற்கு இடமில்லாமல் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியில் தடையை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments