வங்கி பணியாளர்கள் தேர்வில் மாநில மொழிகள் கட்டாயம் வேண்டும் என்பதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

-MMH

தமிழ்நாட்டில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வங்கித் தேர்வு நடத்தும் வங்கி பணியாளர் தேர்வுக் கழகம் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடும் விளம்பரத்தில் மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

 இதன் காரணமாக வேறு மாநிலத்தார் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி எழுத்தர் பணிகளில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, 2022 to 2023 ஆம் ஆண்டில் 288 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இவ்வாண்டும் அவ்வாறான நிலையை தொடர வாய்ப்புள்ளது. இதனை கண்டித்து மாநில மொழியான தமிழ் மொழியில் தேர்ச்சி கட்டாயம் என அறிவிக்க கோரியும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக இடங்களை வழங்கிட வேண்டும் என்றும் கூறியும் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருவகையாக தூத்துக்குடியிலும் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கலந்து கொண்டன. திராவிடர் கழகம் மாநில பேச்சாளர் மானமிகு ஐயா பெரியார் செல்வம் அவர்கள் தொடக்க உரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments