விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம  குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவில்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ஜல்ஜீவன் மிஷின் (JJM) சார்பில்

களநீர் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர்த் தேவை பற்றி மழைநீர் சேமிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் எவ்வளவு உப்பு குளோரைடு இரும்பு சத்து இருக்க வேண்டும் என சோதனை செய்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாம் குடிக்கும் குடிநீர் குடிப்பதற்கு முன் அவர்கள் குடிக்கும் நீர் குடிக்க உகந்ததா என பரிசோதித்து குடிக்குமாறு பஞ்சாயத்து கிராம உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீரின் தரம், தண்ணீர் பகுப்பாய்வு, தண்ணீர் பாதுகாப்பு ,தண்ணீர் சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு ,சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட இரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் திரு ராஜா அவர்கள் உதவி நிர்வாக பொறியாளர் மணி அவர்கள் தலைமை வகுத்தனர். கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் தங்கவேலு  அவர்கள்  துவங்கி வைத்தனர்.

இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத் குமார் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன், விமல், பூர்ணிமா, முத்தமிழ் , விஜய், லிங்கமுத்து முகுந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியை  தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments