குமரி போதகரின் உடந்தையுடன் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்!!

குமரி போதகரின் உடந்தையுடன் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் ஏற்கனவே பல பெண்களை  ஏமாற்றி குடித்தனம் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள். இரண்டாவதாக திருமணம்  செய்த பெண்ணின் தாயார் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல். போலி கல்வி சான்று மூலம் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றதும் அம்பலம்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடுங்குளம் தோட்டவரம்பு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விஜின்குமார். இவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு 15 வயதாகிறது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அடுத்ததாக  இரட்டை பிள்ளைகளாக பிறந்த இரண்டு மகள்கள்.

அவர்களுக்கு 14 வயதாகிறது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.  விஜின்குமார் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர் பின்னர் சமீபத்தில் மினி பேருந்து ஓட்டுனர் ஆகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய தாயார்  மாற்றுத் திறனாளி நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய தகப்பனாரும் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுங்குளத்தில் வசித்து வருவதாகவும் வீடு வீடாக சென்று ஜெபம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விஜின் குமார் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்த போது பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதில் சாமியார் மடம் அருகே உள்ள ஒரு இளம்பெண்ணை அவரது பெற்றோரிடம் வேலைக்கு என்று கூறி ஏமாற்றி அழைத்து கேரளாவுக்கு கொண்டு சென்று அங்கு தனது தாய் இரண்டாவதாக திருமணம் செய்த மாற்றுத் திறனாளி நபரின் வீட்டில் தங்க வைத்து தனி குடித்தனம் நடத்தியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காட்டாத்துறை அருகே வாடகைக்கு வீடு எடுத்து ஒரு இளம் பெண்ணுடன் கலந்த சில மாதங்களுக்கு முன்பாக தங்கி இருந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மினி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்த போது கழுவந்திட்டை பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டாராம். மினி பேருந்து உரிமையாளரிடம் தன்னை வேன் ஓட்டுநர்கள் தாக்கியதாக பொய் கூறியதாகவும் அதன் பின்னர் காவல் நிலையத்தில் மேற்படி விஜின்குமாரை தாக்கியவர்கள் போய் புகார் கொடுத்தபோது பெண் விவாகரத்தில் தாக்கப்பட்ட சம்பவம் வெளியானதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறான முறையில் பேசி வந்ததாகவும் அந்தப் பெண்ணை கணவரிடம் இருந்து பிரித்துக் கொண்டு செல்ல முயன்றதாகவும் கூறி இவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இவர் மினி பேருந்து ஓட்டுனராக மாறியது எப்படி என்பது பெரிய கதையாகவே உள்ளது. இவர் மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா பள்ளியில் தமிழ் வழி கல்வியில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். இதனால் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற முடியவில்லை. அதனால் இவர் ஆசிரியர் ஒருவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்ததாகவும் அந்த பழக்கத்தில் அந்த ஆசிரியரிடம் கூறி இரணியல் அரசு பள்ளியில் படித்ததாக டி சி சான்று வழங்கியதாகவும் அந்த டிசி சான்றின் அடிப்படையில் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த முதல் தகவல் அறிக்கையில் போலியாக கல்வி சான்று பெற்று கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற தகவல் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் விஜின் குமார் தற்போது கடத்திச் சென்று போதகர் உதவியுடன் இரண்டாம் திருமணம் செய்துள்ள பெண்ணின் தாயார் தனது மகளை கண்டுபிடித்து தர கோரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விஜின்குமாரின் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போதகர் உட்பட நான்கு பேரையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது போதகர்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு திருமணச் சான்றிதழ் விற்பனை செய்து வரும் விவகாரத்தில் தற்போது ஆட்டோ டிரைவர் மற்றும் மினி பேருந்து டிரைவரான விஜின் குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே 18 வயதான இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததாக திருமணச் சான்று விற்பனை செய்த மேக்காமண்டபம் செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்த லிவிங் லைட் சபை போதகர் பிரின்ஸ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Comments