தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா!! அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்!!


தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 27ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 8வதுநாள் நிறைவு விழாவான மதிய கொடைவிழா நடைபெற்றது.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கொடைவிழாவை முன்னிட்டு காலை பால்குடம் நேமிசம் நிகழ்ச்சி நடைபெற்று முத்துமாரியம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மதிய கொடை பூஜை நடைபெற்றது. பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சாமி தரிசனம் செய்து மதிய கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.  


இந்த நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா, செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞானராஜ், பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பொன்ராஜ், பிரபு, துணைச்செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், கனகமாரியப்பன், மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் அன்னலட்சுமி,  திமுக வட்டச்செயலாளர் மாரிசெல்வ ஈஸ்வரன், தொழிலதிபர் முருகேசன், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments