தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா!!!

-MMH

கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக தெய்வச்செயல்புரம் மற்றும் அணியாபுரம் நல்லூரிலும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு  அவருடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புஷ்பா அஞ்சலி நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வசவப்பபுரம் அன்னை முதியோர் கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கியும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

காமராஜர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேச்சி,தம்பான், சுடலைமுத்து முருகன், வசந்த், நயினார், ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி, சுந்தர்ராஜ், குமார், விநாயகப் பெருமான், தம்பான், மூர்த்தி,  இசக்கிமுத்து, பரமசிவன், கிளை தலைவர் கணேசன், பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியின் அன்னதானம் மற்றும் இனிப்புகள் அனைத்தும் சமூக ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் சின்னத்துரை ஏற்பாடு செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments